top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-132 - தோல்வியை தவிர்க்க விளையாடுகிறீர்களா?"

Updated: Feb 19, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-132

தோல்வியை தவிர்க்க விளையாடுகிறீர்களா?


  • கால்பந்தாட்டத்தின் கடைசி 10 நிமிடங்கள். இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருக்கின்றன. அந்த தொடரில் ஒரு அணி ஏற்கனவே அதிக புள்ளிகளுடன் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியை தோற்காமல் சமன் செய்தாலே அரையிறுதிக்கு தகுதிபெற்றிடுவர். இரண்டாவது அணி, இந்த ஆட்டத்தில் தோற்றால், தொடரில் இருந்து வெளியேற வேண்டும். கடைசி பத்து நிமிடங்களில் வெற்றி பெறுவதற்கு போராட வேண்டுமா? அல்லது தோல்வியை தவிர்க்க போராட வேண்டுமா? என்ற கேள்வி இரு அணிகளுக்கும் வருகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?

  • தன் நாற்பதாவது வயதில், தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவருகிறது. அது சற்று தீவிர நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். எண்ணற்ற மருந்து, மாத்திரைகளையும், சிகிச்சை முறைகளையும் பரிந்துரைக்கிறார்கள். நோயின் தாக்கத்தால் ஏற்படும் வலிகளை குறைக்க சிகிச்சைகள் தொடர்கின்றன. இந்த சூழ்நிலையில் அவரின் மனநிலை எப்படி இருக்கும்? எப்படியாவது இந்த நோயில் இருந்து விடுபட வேண்டுமென்ற நோக்கில் (தோல்வியை தவிர்ப்பதில்) மருந்துகளை எடுக்கலாம்! மாறாக, நோயை மருந்தும், சிகிச்சை முறைகளும் பார்த்துக் கொள்ளட்டும், நான் எனது இலட்சியப் பயணத்தை இன்னொருபுறம் தொடர்கிறேன் என்று வெற்றியை நோக்கி ஒடலாம்! இந்த சூழ்நிலையில் உங்கள் கருத்து என்ன?

விளையாட்டின் ஒவ்வொரு தருணமும் சவாலானதுதான். சிலசமயங்களில் வெற்றியை நோக்கி ஆக்ரோஷமாக முன்னேற வேண்டும். சில தருணங்களில் எதிராளிக்கு வாய்ப்பளிக்காமல் தடுப்பாட்டத்தை பலப்படுத்த வேண்டும். எந்த முறையை எப்போது கையாள வேண்டுமென்று முடிவெடுப்பது அணித்தலைவரின் கையில். இப்படிப்பட்ட கடினமான ஆட்டத்தில் தோல்வியை தவிர்த்து சமன் செய்வது சாமர்த்தியம் என்ற ஒரு சாரார் கூறுகிறார்கள். விளையாட்டென்றால வெற்றி-தோல்வி வரவேண்டும். வீரர்கள், தங்களின் முழுத்திறனையும் பயன்படுத்தி வெற்றிக்காக போராட வேண்டும். யார் பலசாலியோ, அவர் வெல்லட்டும் என்று விளையாட்டை விளையாட்டாக ஒரு சாரார் கருதுகின்றனர். இதில் நீங்கள் எந்த வகை!


தன் உடல்நலம் பாதிக்காத வண்ணம், தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவரவர்களின் கடமை. செல்வம் சேர்ப்பதை பிரதானப்படுத்தி ஆரோக்கியத்தை சீரழிப்பவர்களை முட்டாள் என்று சொல்வதைத்தவிற வேறென்ன சொல்ல? எவ்வளவுதான் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தாலும், இன்றைய மாசுபட்ட உலகில், புற்று நோய் போன்று எண்ணற்ற கொடிய நோய்கள் பலரையும் தாக்குகிறது. அப்படி உங்கள் கட்டுப்பாட்டை மீறி கொடிய நோயினால் ஒருவேளை பாதிக்கப்பட்டால், அவ்வளவுதான் வாழ்க்கை, எல்லாம் முடிந்ததென்று என்று விதியை நொந்து பின்வாங்கிவிடுவீர்களா? நோயை முதலில் சரிசெய்ய முயற்சிப்போம் என்று அதையே முழுகவனத்துடன் அலசிக்கொண்டிருப்பீர்களா? வந்த நோய்க்கான சிகிச்சை ஒருபுறம் தொடர, அந்த நோய்குறித்த கவலையை மறந்து இலட்சியப்பயணத்தை தொடர்வீர்களா?


நடைமுறையில், அந்த நோய்குறித்தும் அதை சரிசெய்வது குறித்தும் அதீதமாக சிந்தித்தவர்களால் அந்த நோயை வெல்ல முடியவில்லை. நோயை மறந்து இலட்சியத்தை பின்தொடர்ந்தவர்கள், பல சாதனைகளை புரிந்து காட்டியுள்ளார்கள். நீங்கள் நோயினால் தோற்றுவிடுவோமோ என்று பயந்து அதையே சிந்தித்துக்கொண்டிருந்தால், நோய் கட்டாயம் தோல்வியை ஏற்படுத்திவிடும். நோய்க்குரிய சிகிச்சையை ஒருபுறம் எடுத்துக்கொண்டு, மறுபுறம் தன் இலட்சியக் கனவுகளுக்காக போராடிய பலர். பல கொடிய நோய்களையும் வென்று காட்டியுள்ளார்கள்.


நாடுகளை விரிவுபடுத்த நினைக்கும் அரசன் தன் எல்லையை கடந்து போர்தொடுப்பான். வென்றால் புதியபூமிகள் தன் கட்டுப்பாட்டில் - தோற்றால் இழப்புக்களுடன் நாடு திரும்பவேண்டியதுதான். படையெடுக்கப்பட்ட தேசம், தோற்காமல் தற்காத்துக்கொள்வதற்காகவே போராடும். தோற்காமல் தற்காத்துக்கொள்பவருக்கு ஆதாயம் ஏதுமில்லை. எல்லையை கடந்து வெற்றிக்காக போராடுபவருக்குத்தான் புதிய பூமிகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

  • விளையாட்டில், தோல்வியைக்கண்டு பயப்படாமல், வெற்றிக்காக தன் முழுபலத்தையும் முன்னிறுத்தி கடைசிவரை போராடிப் பார்க்கலாம்;

  • வியாபாரத்தில் சிக்கல்கள் வரும்போதும், பணப்பற்றாக்குறைகள் வரும்போதும், தோல்வியை தவிர்க்க அதைவிட்டு விலகாமல், சிக்கல்களை தீர்க்க போராடலாம்;

  • உறவுகளில் விரிசல் ஏற்படும்போது, தன்பக்க நியாயத்தை மட்டும் பேசிக்கொண்டிருக்காமல், சம்பந்தப்பட்டவருடன் மனம்விட்டுப்பேசி சமாதானமாகலாம்;

  • அதிகாரம் படைத்தவர்களிடம் மோதாமல் விலகிச்செல்பவர்கள் மத்தியில், நியாத்தை நிலைநாட்ட சட்டப்போராட்டம் செய்யலாம்;

அன்றாடம் எண்ணற்ற விடயங்களில் பல சிக்கல்கள் வந்துபோகும். அந்த சிக்கல்களை சந்தித்து வெற்றிபெற வேண்டுமா? அல்லது தோல்விக்கு பயந்து அந்த சிக்கல்களில் இருந்து விலகி வேறொன்றுக்கு போகவேண்டுமா? என்ற முடிவை நீங்கள் எடுக்கவேண்டிவரும். ஒருவேளை நீங்கள் விலகியோட முடுவுசெய்தால், அடுத்தடுத்து புதியவற்றில் வரும் சிக்கல்களில் இருந்து முடிவில்லாமல் விலகியோடிக்கொண்டே இருக்க வேண்டும். மாறாக அந்த சிக்கல்களில் சிக்கித் தோற்றாலும் பரவாயில்லை என்று தைரியமாக வெற்றிக்காக போராடத்துவங்கினால், வாழ்க்கை அர்த்தமுடையதாக உங்கள் கட்டுப்பாட்டில் போய்க்கொண்டிருக்கும்.


தோற்றுவிடக் கூடாதென்பதற்காக விளையாடுவதானால்

என்றைக்கும் உங்களால் முதலாவது இடத்தை பிடிக்கவே முடியாது;


வந்தால் மலை, போனால் மடு என்று

தைரியமாக போராடுபவருக்குத்தான்

சாதனையும், சரித்திரமும் சாத்தியமாகும்;


தோல்விகளுக்கு ஆஞ்சி

சவால்களை சுருக்கினாள்

வெற்றியின் அளவும் சுருங்கிவிடும்;


- [ம.சு.கு 18.02.2023]

7 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page