top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-83 – எல்லாவற்றிற்கும் எல்லைக்கோடு முக்கியம்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-83

எல்லாவற்றிற்கும் எல்லைக்கோடு முக்கியம்!


  • வீடு கட்டும் வேலை, பொதுவாகவே அது மெதுவாகத்தான் நடக்கும். வேலையை நன்றாக செய்ய வேண்டும், அதேசமயம் சீக்கிரமாக முடித்துத் தர வேண்டும் என்று நீங்கள் எத்தனை முறை கட்டிட மேஸ்திரியிடம் சொன்னாலும், கட்டிட வேலை அவ்வளவு சீக்கிரம் முடியாது. அதேசமயம் இந்த தேதியில் புதுமனை புகுவிழா என்று அழைப்பிதழ் அடித்து மேஸ்திரியிடம் சொல்லிவிட்டால், அந்த கடைசி ஒரு வார காலத்தில், படுவேகமாக கிட்டத்தட்ட 95 சதவீதம் முழுமையாகிவிடும். அதுவரை இல்லாத வேகம் எப்படியோ எல்லை கோட்டை நெருங்கும் கடைசி நாட்களில் வந்து வேலை முடிகிறது ஆச்சரியம்தான்.

  • அலுவலகத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட வேலையை நன்றாக செய்யச் சொல்லி ஒரு ஊழியரிடம் கொடுக்கிறீர்கள். அதை எப்போதுக்குள் முடிக்க வேண்டும் என்ற காலவரையரை எதுவும் சொல்லவில்லை. ஊழியரும் அதை செய்ய துவங்குகிறார். அதற்கு இடையிடையே ஒருசில வேலைகளை அடுத்தடுத்த கொடுக்கிறீர்கள். அவற்றை அவசரம் என்று செய்யச் சொல்வதால், அந்த வேலைகளை உடனுக்குடன் முடித்து விடுகிறார். ஆனால் முதலில் சொன்ன குறிப்பிட்ட வேலை அவர் இன்னும் செய்துகொண்டேதான் இருக்கிறார். முடிந்த பாடில்லை. ஏன்?

வீடு கட்டுதல், சாலையை அமைத்தல், பாலம் கட்டுதல் என எந்த ஒரு கட்டுமான வேலையிலும் திறப்பு விழா என்று ஒருநாள் குறிக்கப்படுவது அதிமுக்கியம். எவ்வளவுதான் கட்டுமானத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டுமென்று முன்னரே திட்டமிட்டு நடந்தாலும், அந்த இறுதிதேதி குறிக்கப்பட்ட பின் வேலையின் வேகம் தானாய் அதிகரிக்கிறது. கடைசி தினங்களில் மீதம் இருக்கும் நேரத்துக்குள் முடிப்பதற்குரிய திட்டம் தலைகீழாக மாற்றம் செய்யப்பட்டு வேலை நடக்கிறது. அதுவும் அமைச்சர் திறப்பு விழாவுக்கு வருகிறார் என்றால், இரவு-பகல் பாராமல் வேலை நடந்து முடிகிறது. திறப்பு விழா என்னும் எல்லைக்கோடு வகுக்கப்படாத வரை, வேலை வெறுமனே முடிவின்றி வளர்ந்து கொண்டே இருக்கிறது.


அலுவலக வேலைகளில், எந்த ஒரு வேலையையும் இவ்வளவு மணி நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று வரையறை இருந்தால், ஊழியர்கள் அந்த வரையறைக்குள் முடிக்க முயல்கிறார்கள். அந்த குறிப்பிட்ட நேர வரையரைக்குள் இலக்குகளை அடைபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டமே இதன் அடிப்படையில்தான் உருவானது. குறிப்பிட்ட காலவரையறை இல்லாமல் வேலையை செய்யச் சொன்னால், ஊழியர்கள் மெதுவாக செய்து கொண்டே இருப்பார்கள். முடிப்பதற்கு நாள் குறிக்கப்படாத எந்த ஒரு வேலையும் தொடர்ந்து செய்யப்பட்டு கொண்டே தான் இருக்கும்.

  • புத்தகம் பதிப்பிற்குரிய நாள் குறிக்கப்படாத வரை, நூலாசிரியர் தொடர்ந்து நூலை மெதுவாக எழுதிக் கொண்டே இருப்பார். பதிப்புக்குரிய நாள் குறிக்கப்பட்டால், எழுத்தின் வேகம் சூடுபிடித்து புத்தகம் முழுமை பெருகிறது.

  • திரைப்படங்களுக்கு வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டால் தான், திருத்தங்கள், இசைகலவை, வெட்டல், ஒட்டல் என்ற எல்லா வேலைகளும் வேகமெடுத்து முடிகிறது.

  • ஒரு புத்தகத்தை நேரம் கிடைக்கும்போது படிக்கலாம் என்றால் அது 100 நாட்களுக்குமேல் இழுத்துச் செல்லும். ஆனால் 10 நாட்களில் முடிக்க வேண்டும் என்றால், எங்கெல்லாம் முடியுதோ, அங்கு நேரத்தை உருவாக்கி படிப்பீர்கள். இல்லாவிட்டால் உறக்கத்தைக் குறைத்து படித்து முடிப்பீர்கள்.

  • எல்லைக்கோடு வரையறைக்கப்படாவிட்டால் தேசங்களும் நிலங்களுக்கு சண்டையிட்டுக் கொண்டே தான் இருக்கும்.

எல்லைக்கோடு, வேலைக்கும் மட்டுமில்லாமல்

மனிதனின் ஆசைக்கும் ஒரு முற்றுப்புள்ளியாக இருந்து

வாழ்வின் நிம்மதிக்கு வழிவகுக்கும்;


எந்த ஒரு வேலைக்கும், நேரவரையறையும், முடிக்கும் தேதியும் நிர்ணயிக்கப்படாவிட்டால், அந்த செயல் வளர்ந்து கொண்டே போகும் மென்பது எழுதப்படாத விதி. ஒரு வரையறை நிர்ணயமானது, அதை செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தை திணிக்கிறது. வரையறையற்றது முடிப்பதற்கான கட்டாயம் இன்றி தொடர்ந்து. இயல்பிலேயே சோம்பலை விரும்பும் மனித மனம், நேரவரையறை இல்லாதவற்றை பின்னர் செய்யலாம் என்று தள்ளிப்போடுகிறது. ஒரு முதலாளியாக நீங்கள் எதை முடிக்க விரும்பினாலும், ஊழியர்களுக்கு வழங்கும் எல்லா வேலைகளுக்கும் நேரவரை வகுத்து செயல்படவைத்தால், வேலைகள் சீக்கிரம் முடியும். ஒருசில சமயம், சில வேலைகள் தாமதமாகலாம். ஆனால் வேலைகள் எல்லையின்றி இழுக்கப்படுவதைவிட, ஒரு எல்லைக்கோடு வகுத்து, சற்றே தாமதாமாய் முடிந்தாலும் பரவாயில்லைதானே. காரியம் எதுவாயினும் அது சிறப்புற நிகழ்தேற, காலநேர நிர்ணயம் அவசியம்;


குறிப்பிட்ட தினம், குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்பட வேண்டும் என்றால், அதை முடிப்பதற்கான முறைகளை மூளை யோசிக்கிறது. முடிவுநாள் குறிக்கப்படாமல் இருந்தால், அந்த வேலையின் ஒரு பகுதியை மட்டும் அப்போதைக்கை எப்படி செய்வது என்று மூலை யோசிக்கிறது.


நம் வாழ்க்கைக்கு எல்லை இருப்பதால்

நாம் சாதிக்கவேண்டிய அனைத்தையும்

ஒரு காலஎல்லைக்குள் முடித்தாக வேண்டும்;


எதையும் முடிப்பதற்குரிய முகூர்த்த நாள்

தானாய்வர தாமதமாகலாம்;

அதுவரை நீங்கள் இருப்பது உறுதி இல்லை;


நீங்களே எல்லாவற்றிக்கும் முகூர்த்த நாள், நேரம் குறித்து

சிறப்பாக முடித்து வைத்தால் எல்லோருக்கும் பயனாகும்;


கல்வியோ, செல்வமோ, தர்மமோ - எதுவாயினும்

ஒருகால எல்லைவகுத்து அதற்குள் முடித்து

மன நிறைவு கொள்ளுங்கள்!!


- [ம.சு.கு 31.12.2022]

Recent Posts

See All

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comentários


Post: Blog2 Post
bottom of page