top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-73 – தோல்விகள் சில திருப்பங்களுக்கான ஆரம்பமாகலாம்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-73

தோல்விகள் சில திருப்பங்களுக்கான ஆரம்பமாகலாம்!


  • வியாபாரத்தின் மூலமாக செல்வந்தர்களான முதல் தலைமுறை வெற்றியாளர்கள் ஒவ்வொருவரின் கதையையும் கேட்டுப்பாருங்கள். ஒருசிலர் பள்ளி/கல்லூரி கல்வியை சரிவர முடிக்காதவராகவோ, அல்லது கற்பதற்கு வாய்ப்பே கிடைக்காதவராகவோ இருப்பார்கள். பலர் ஆரம்பகாலங்களில் பலவற்றில் தோற்றவராகவும் இருப்பார்கள். ஒருவேளை தோல்விகளை பெரிதாக்கி துவண்டு விலகியிருந்தால், கடைக்கோடி தொழிலாளியாக வாழ்க்கையை நொந்துகொண்டிருக்க வேண்டியதுதான். தனக்கு படிப்பு வரவில்லை என்பதற்காக துவண்டுவிடவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். நீங்கள் எப்படி?

  • ஒரு கைப்பந்தாட்ட வீராங்கனை. தன் இரயில் பயணத்தின் போது திருடர்களால் இரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார். பக்கத்து தண்டவாளத்தில் வந்த இரயில் அவரது ஒரு காலை சிதைத்தது. தன் ஒரு கால் அகற்றப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருக்கும்போது, பொதுவாக எல்லோருக்கும் தங்களின் வாழ்க்கை என்னவாகுமோ என்ற பயமும் கவலையும் இருக்கும். ஆனால் இவருக்கு, திடீரென்று எவரெஸ்டு சிகரம் ஏறி சாதிக்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. தன் ஒரு இழப்பை இன்னொரு சாதனையால் வென்றெடுக்க வேண்டும் என்று போராடினார். ஒரு செயற்கை காலுடன் உலகின் ஏழு பெரிய சிகரங்களையும் எட்டியுள்ள உலகின் முதல் பெண்மணியாய் இன்று நிற்கிறார்.

எந்த ஒரு பள்ளியிலும், கிட்டத்தட்ட பாதி மாணவர்களுக்கு கல்வியில் பெரிய ஈடுபாடு இருப்பதில்லை. பெற்றோரின் கட்டாயத்திற்காக வந்து போகிறார்கள். இதில் ஒரு சிலர் தேர்வுகளில் தோல்வி அடைகிறார்கள். தேர்வுத் தோல்விகளைப் பற்றி அவர்கள் அதிகமாக வருத்தப்படுவதில்லை, ஏனெனில் அவர்கள் படிக்கவில்லை, அதனால் தேறவில்லை என்பது அவர்களுக்கே நன்றாக தெரியும். பெற்றோர்கள் திட்டுவதற்கு என்ன பதில் சொல்வது என்று மட்டுமே யோசிக்கிறார்கள்.


கல்வி கற்காவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று பெற்றோர்களும், சமுதாயமும் கூறினாலும், அது யதார்த்தமன்று. கல்வி என்பது, பழத்தின் சாற்றை பிழிந்து எடுத்துக்கொள்வது போல, பிறரது அனுபவங்களிலிருந்து படிப்பினைகளை கற்றுக்கொள்வது. எல்லோரும், எல்லாவற்றையும் அனுபவத்தில் கற்றுக்கொள்ள அதிக காலமாகும் என்பதால்தான், சமுதாயத்தின் சவால்களை சந்திக்க, கல்வி கட்டாயமாக்கப் பட்டுவருகிறது.


என்னதான் கற்றாலும், நிஜத்தில் சவால்களை நீங்கள்தான் போராடி வெல்ல வேண்டும். கல்வியை தவறவிட்டவர்கள் சற்று சிரமப்பட்டு, சிலபல தோல்விகளை படிப்பினையாக்கி வெற்றி பெறுகிறார்கள். கல்வி வரவில்லை என்று பெரிதாக யாரும் துவண்டுவிடுவதில்லை (ஒருசில முட்டாள்தனமான தற்கொலைகளைத்த தவிற). உலகில் பல லட்சம் மாற்று வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. தனக்கு கிடைக்கின்ற ஏதோ ஒன்றை கெட்டியாக பிடித்து அதில் தன் சாமர்த்தியத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். கிடைத்த ஒன்றைக் கற்று, அதையே சுயதொழிலாக துவங்கி படிப்படியாக வளர்கின்றனர். ஒன்றில்லாவிட்டால் மற்றொன்று என்ற தெளிவிருந்தால், எதுவும் சாத்தியமே.


ஒரு காலை இழந்த நிலையில் எவரஸ்டு சிகரம் ஏறி சாதித்த அருனிமா சின்ஹா கதையை சற்று தேடி படித்துப் பாருங்கள். ஒரு கைப்பந்தாட்ட வீராங்கனையாக செயற்கை காலுடன் விளையாடி இருக்கலாம். கிடைத்த அரசு வேலையில் நிம்மதியாக காலம் கழித்திருக்கலாம். ஆனால் அனுதாபங்களை எதிர்பார்த்திருக்காமல், காலம் அவரை வேறு திசைக்கு திருப்பியது. திரும்பிய புது திசையில் போராடி சாதித்தார். இன்று உலகமே அவரை திரும்பிப் பார்க்கிறது. அவரை நம்பிக்கை நட்சத்திரமாய் தேசம் “பத்மஶ்ரீ” விருது கொடுத்து கௌரவித்தது. தன் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை வென்றெடுக்க, புதியதொரு முயற்சியில் போராடினார், ஒரு தோல்வி, அவருக்கு ஆரம்பப்புள்ளியாய் இருந்து புதிய சிகரத்தில் நிறுத்தியது.


ஆம்! தோல்விகள் பலவிதமாய் எல்லோருக்கும் கட்டாயம் வந்துபோகும். நாணயத்தின் இருபக்கம் போல ஒருவர் வென்றால், மற்றவர் தோற்பது இயற்கைதான். ஆனால் அந்த தோல்வியில் துவண்டு நின்றுவிடுகிறோமா என்பதுதான் இங்கு உங்களுக்கான கேள்வி?


வென்றவர்களைப் பற்றிய 1000 உதாரணங்களையும், கதைகளையும் யார் வேண்டுமானாலும் (நான் உட்பட) சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட துறையில் உங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை, தோல்வி நிரந்தரம் என்று தெரிந்துவிட்டால், இன்னும் எத்தனை காலங்களுக்கு அதையே கட்டி அழுவீர்கள். ஒத்துவராத துறையையே கட்டிக்காத்துக் கொண்டிருப்பதில் என்ன பயன். வேறென்ன வாய்ப்பு இருக்கிறது என்று தேடுங்கள். கிடைக்கின்ற வாய்ப்பில் ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளுங்கள்; நீங்கள் காலதாமதமாக துவங்கினாலும், அதற்குறிய காலத்தில் வெற்றிபெற எல்லோருக்குமே வாய்ப்பிருக்கிறது.


எந்தத் துறையிலும்

அதன் உச்சத்தை அடைய – மனஉறுதியும்

விடாமுயற்சியும் தான் அதிமுக்கியம்;


போதிய அனுபவம் இல்லாவிட்டால்

களத்தில் குதித்து தெரிந்து கொள்ளலாம்;


ஆரம்பகால தோல்விகள் நிரந்தரமல்ல;

மன உறுதி இருந்தால்

கற்றுக்கொண்டு எதையும் மாற்றியமைக்கலாம்;


புதிய களங்களில் தைரியமாக குதித்து சாதிக்க

நீங்கள் தயாராக இருப்பது மட்டுமே முக்கியம்;


- [ம.சு.கு 21.12.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comments


Post: Blog2 Post
bottom of page