top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-41 – இன்றைய சௌகரிய வட்டம் நிரந்தரமானதா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-41

இன்றைய சௌகரிய வட்டம் நிரந்தரமானதா?


  • 20 ஆண்டுகளுக்கு முன்னர், எல்லா அலுவலகங்களிலும், வங்கிகளிலும் கடிதங்கள் & முக்கிய ஆவணங்கள் எல்லாம் தட்டச்சு செய்யப்பட்டன. தட்டச்சர்களுக்கான தேவை நிறையவே இருந்தது. கணினி அறிமுகமானபோது, ஒரு சிலர் புதியவற்றைக் சீக்கிரத்தில் கற்றுக் கற்றுக்கொண்டு அடுத்த வளர்ச்சிக்கு தயாரானார்கள். ஒரு சிலர் காலத்தின் கட்டாயத்தால் விருப்பமின்றி கற்றுக்கொண்டு வேலைகளை தக்கவைத்துக் கொண்டனர். ஒருசிலர், தட்டச்சு வேலையும், வருவாய் போதுமென்று அந்த சௌகரிய வட்டத்திற்குள்ளேயே தங்கினார்கள். பத்து ஆண்டுகளில் அந்த சௌகரிய வட்டம் காணாமல் போனது!

  • எண்ணற்ற வாகன ஓட்டுனர்கள், அதையொரு முழு நேர தொழிலாக கொண்டு வாழ்ந்துவருகிறார்கள். அந்த வேலை சௌகரியமாக இருக்கிறதென்றும், அதுவே தங்களின் வாழ்நாளுக்கு போதுமென்று எண்ணுகிறார்கள். வளர்ந்த நாடுகளில் தானியங்கி வாகனங்கள் சோதனைமுறையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இன்னும் 15-20 ஆண்டுகளில் இந்த தானியங்கி வாகனங்கள் நம்மை முழுமையாக ஆக்கிரமிக்கப் போவது உறுதி. ஒட்டுனர் வேலையென்ற சொல்லே மறைந்துபோகலாம்!

என்ன மாறினாலும், தட்டச்சின் தேவை தொடருமென்று எண்ணி கணினியை தவிர்த்தனர். அந்த கணினியே தட்டச்சையும் உள்ளடக்கிய பெரிய பூதம் என்று புரிந்துகொள்ளாதவர்கள், தேவையற்றவர்களாக சீக்கிரத்திலேயே வீட்டிற்கு ஆனுப்பப்பட்டனர்.


உலகில் குறைந்தபட்சம் 10 கோடிக்கும் அதிகமான ஓட்டுனர்கள் இருப்பார்கள். ஆனால் சீக்கிரத்தில் அந்த தொழில் இருக்காது. நேற்று இருந்த பல தொழில்கள் இன்று இல்லை. இன்று இருக்கும் பல தொழில்கள் நாளை இருக்காது. பொருட்களிலும் அப்படித்தான். பல பொருட்களின் தேவை குறைந்து சந்தையில் காணாமல் போய்விடுகிறது. அவற்றை உற்பத்தி செய்தவர்களும் காணாமல் போய்விட்டனர்.


விவசாயம், உற்பத்தி, சேவை என்று எல்லாத் துறைகளிலும் மாற்றம் வெகுவேகமாக இருக்கிறது. மனிதன் கஷ்டப்பட்டு செய்து கொண்டிருப்பதை, இயந்திரங்கள் சுலபமாக செய்கின்றன. சீக்கிரத்தில் இயந்திர மனிதர்கள் 95% பணிகளை ஆக்கிரமித்துவிடுவார்கள். மாற்றத்தை எப்படி சந்திக்கப்போகிறீர்கள்.


  • இன்று செய்பவைகள் சௌகரியமாக இருக்கிறது, போதிய வருவாய் கிடைக்கிறது. இதுவே போதும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா?

  • போதும் என்ற மனமே நிம்மதி தரும் என்று தத்துவத்தைச் சொல்கிறீர்களா?

இன்றைய தினத்தின் சௌகரியத்தில் திளைத்து ஓய்வெடுக்கச் சென்றால், சில நாட்களில் அந்த வருவாயின் மூலாதாரங்களே மாறிவிடும். எது நம் கட்டுப்பாட்டில் உள்ளதோ, எது நிரந்தரம் என்று எண்ணுகிறோமோ, அவை சீக்கிரத்தில் சாத்தியமற்றவையாகலாம். நீங்கள் எது நல்லதென்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களோ, அவை நஞ்சாகலாம்.


பகைவன் எதிரெதிராக மட்டுமே வருவான் என்று எண்ணி இருந்தால் ஏமாந்து போவீர்கள். ஏனெனில், மனிதகுலத்தை சீரழிக்க எண்ணற்ற வடிவங்களில் ஏற்கனவே அவர்கள் நம்வீட்டில் குடியேறி இருக்கக்கூடும்.


எல்லாமே சௌகரியமாக, சுகமாக சென்று கொண்டிருக்கிறதென்று எண்ணி வாழ்ந்த தேசங்களில், ஒரு போர் அவர்களை அகதிகளாக்கி உணவிற்கே கையேந்த வைத்திருக்கிறது. கொரோனா என்னும் பெருந்தொற்று, உலகையே சிலமாதங்கள் சிறைபடுத்தி, வாழ்கை நிலையற்றதென்பதை உணரவைத்தது.


யோசியுங்கள்

  • எத்தனை காலங்களுக்கு உங்கள் தொழில் மாற்றம் காணாமல் இருக்குமென்று?

  • எத்தனை காலங்களுக்கு உங்களிடம் இருக்கும் பணம் விலைவாசி உயர்வில் போதுமாய் இருக்குமென்று?

  • எத்தனை காலங்களுக்கு இந்த அரசுகள், சட்டங்கள், மக்கள் எல்லாம் இப்படியே இருப்பார்கள் என்று?

இருப்பது போதும் என்று எண்ணினாலும்

அந்த இருப்பை தக்க வைப்பதற்கே

மாற்றங்களை கற்க வேண்டியுள்ளது;

கணினியும் ஏனைய கண்டுபிடிப்புகளும்

வாழ்கையின் வேகத்தையும் அதிகரித்துவிட்டன;

அவசர யுகத்தில் சாதிக்க விரும்பினால் – இன்றைய

சௌகரியங்களில் ஊறித் திளைக்காமல்

நாளைய மாற்றத்தை நோக்கி – அந்த

சௌகரிய வட்டங்களை தகர்த்தெரியுங்கள்;

புதிய களங்களை கண்டு வேர்வை சிந்தினால்மட்டுமே

புதிய சாதனைகள் படைக்க முடியும்;


- [ம.சு.கு 19.11.2022]

11 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentarios


Post: Blog2 Post
bottom of page