top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-4 – தவறு செய்வது தவறில்லை! ஆனால் அதையே திரும்பச் செய்தால்....."

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-4

தவறு செய்வது தவறில்லை! ஆனால் அதையே திரும்பச் செய்தால்....



  • புதிய வேலைக்கான நேர்காணலுக்கு செல்கிறீர்கள். தேர்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பு குறித்து ஒரு சிக்கலான பாடத்தைப் பற்றி கேள்வி கேட்கின்றனர். உங்களுக்கு தெரியவில்லை, அதனால் வாய்ப்பை இழக்கிறீர்கள். அடுத்த வாரம் வேறொரு நேர்காணலிலும் அதே கேள்வி கேட்கப்படுகிறது. இப்போதும் தெரியவில்லை என்ற பதில் வருமானால், உங்களுக்கு வேலை கிடைக்காமல் போவது யாருடைய தவறு?

  • வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது திடீரென்று மழை வருகிறது. குடை கையில் இல்லாததால் நனைந்து கொண்டே வீடு திரும்புகிறீர்கள். அன்று வானிலை அறிக்கையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. மறுநாளும் நீங்கள் திரும்பி வரும்போது மழை வருகிறது. இப்போதும் குடை கையில் இல்லை. இப்போது குடையை கையில் கொண்டு செல்லாதது யாருடைய தவறு?

  • உங்கள் வியாபாரத்தில், வாடிக்கையாளருக்கு அனுப்பிய மூட்டையில் பொருட்களின் எண்ணிக்கை சற்று குறைவாக உள்ளதென்று புகார் வருகிறது. உங்கள் ஊழியரின் கவனக்குறைவால் மீண்டும் அநே புகார் வருமானால், வாடிக்கையளர்களை இழக்கக்கூடும். திரும்ப அந்த தவறு நேராமல் இருக்க உரிய பரிசோதனைகளை ஏற்படுத்தாது யாருடைய தவறு?

  • குறிப்பிட்ட உணவு வகைகளால் உங்களுக்கு அதிக உடல் உபாதைகள் வருகின்றன. மருத்துவர் அதை தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்துகிறார். ஆனால் அடுத்த நாள் அதே உணவு வகை உங்கள் முன் வருகிறது. நீங்கள் மீண்டும் அதை சாப்பிட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டால், அது யாருடைய தவறு?


முந்தைய அத்தியாயத்தில் சொல்லியது போலத்தான், வாழ்க்கை எனும் சோதனை முயற்சியில் அறியாமையினால் எண்ணற்ற தவறுகளை முதல் முயற்சியில் நாம் செய்யலாம். ஆனால் சுயஅலசலின் மூலம், அந்த தவறுகளை புரிந்து கொள்ளவேண்டு திருத்த வேண்டும். தவறுகளைப் புரிந்து கொள்ளாமல், திரும்பத் திரும்ப அதையே செய்தால், உங்களை என்னவென்று சொல்வது?


நாம் குழந்தைகள் அல்ல! செய்த தவறையே திரும்பச் செய்தால், நம் பெற்றோர்கள் நம்மை மீண்டும் மீண்டும் திருத்தி வழிநடத்த!! யதார்த்த உலகத்தில், ஒரு முறை தவறு செய்தால், உங்கள் மேலாளர் மண்ணித்து ஏற்றுக் கொள்ளக்கூடும். அதே தவறை திரும்பச் செய்தால், வேலையை விட்டு தூக்கி விடுவார்.


இப்படி ஒவ்வொரு முறையும் தவறுகளை திரும்பத்திரும்ப செய்தால், “புத்தியற்றவன்”, “முட்டாள்” என்று முத்திரை குத்துவார்கள்! தவறுகளை நாம் திரும்பச் செய்துவிட்டு, சமுதாயத்தை பின்னால் குறைசொல்லிப் பயனில்லை. சமுதாயத்தில் நீங்கள் ஒருவர் மட்டுமில்லை, உங்களை எல்லாநேரங்களிலும் பொருத்துக்கொண்டு போக!


சமுதாயத்தில் சாமர்த்தியமாக வாழ நாம் தான் பழகிக்கொள்ள வேண்டும்.


நம் முயற்சிகளில் ஏற்படும் தவறுகளில் பாடம் கற்பதையும் தாண்டி, பிறர் செய்யும் தவறுகளில் இருந்தும் படிப்பினைகளை பெற்று நம்மை சீர்படுத்தினால் மட்டுமே, வெற்றி எளிதாகும்.


ஒருவேளை அந்த தவறுகள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி திரும்பத் திரும்ப நடக்குமானால், அது உங்களுக்கு ஏற்ற இடம்தானா? என்று அடிப்படையை மறுஆய்வு செய்யுங்கள்.


உங்களுக்கு ஏற்ற இடம், ஏற்ற துறை, ஏற்ற தருணம், ஏற்ற மக்கள், என்றால் கட்டாயம் கவனத்தோடு தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். முடியவில்லை என்றால், அது உங்களுக்கான இடம் அல்ல! சீக்கிரத்தில் விட்டு விலகிவிடுங்கள்.


ஒரே தவறைத் திரும்பத் செய்து முட்டாளாகி நிற்காதீர்கள்!


- [ம.சு.கு 13.10.2022]

9 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page