top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-2 – குறுக்கு வழிகளில் நிரந்தரத் தீர்வு கிடைக்காது"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-2

குறுக்கு வழிகளில் நிரந்தரத் தீர்வு கிடைக்காது!


நம்மில் பலருக்கு


  • குறுகிய நேரத்தில் கோடிகளில் சம்பாதிக்க ஆசை!

  • ஒரு நாள், ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு, 5 கிலோ எடை குறைய வேண்டுமென்று ஆசை!

  • எந்திரன் சிட்டியைப் போல புத்தகத்தை கையில் எடுத்தவுடன் முழு அறிவையும் பெற்று விட ஆசை!

  • மருந்தை உண்டவுடன், தலைமுடி வளரவேண்டும், தலை வலி நிரந்தரமாக நீக்க வேண்டும், என்று பேராசை!


நம்முடைய இந்த எல்லா ஆசைகளும், தேவைகளும் நியாயமானதாக இருக்கலாம். ஆனால் அதை செயல்படுத்தி முடிக்க நாம் கொடுக்கும் நேரம்தான் சாத்தியமற்றதாக இருக்கிறது.


  • நம் எல்லோராலும் கட்டாயம் ஒருநாள் கோடிகளில் சம்பாதிக்க முடியும். ஆனால் இன்றைய தினம் வெறும் 100 ரூபாயை கையில் வைத்துக்கொண்டு, நாம் கோடிகளில் நியாயமான முறையில் சம்பாதிக்க வேண்டுமானால், .ஒரே நாளில் அது சாத்தியமாகாது. அதற்கென்று சிலகாலம் எடுக்கத்தானே செய்யும். அதைவிடுத்து, நாளையே சம்பாதிக்க வேண்டுமென்று குறுக்கு வழிகளில் தவறானவற்றை செய்தால், மாட்டிக்கொள்ளும்போது, விளைவுகள் அவமானகரமானதாகவே இருக்கும்.

  • ஒரு நாளில் நீங்கள் குண்டாகி விடவில்லை. வருடக்கணக்கில் கண்டதைத் தின்று உடல் பெருத்துள்ளீர்கள். ஒரே வாரத்தில் ஒல்லியாக வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தானே! தினம்தவறாமல் உடற்பயிற்சியும். உணவுக்கட்டுப்பாடும். சில மாதங்களுக்கு தொடர்ந்தால் தான் ஆரோக்கியமான முறையில் உங்கள் எடையை குறைக்க முடியும். அதைவிடுத்து மருந்து மாத்திரைகளைக் கொண்டு வேகமாக குறைக்க முயன்றால் உடல் ஒத்துழைக்காமல், விளைவுகள் வேறு விதமாகலாம்.

  • புத்தகத்தைப் படித்து, அப்படியே மனதில் பதியவைக்க வேண்டுமானால், அதை ஈடுபாட்டுடன், பொறுமையாக படித்தால் தான் முடியும். நாவலைப் படிப்பது போல, வேகமாகப் படித்தால் அவை மனதில் பதியாது. நம் அறிவில் எதை ஏற்றவும், நமக்கு போதிய நேரம் தேவைப்படும். நம் மூளையொன்றும் கணினியல்ல! விரலி நினைவகம் [பென்டிரைவை] கொண்டு தகவல்களை நொடிகளில் ஏற்றிவிட…

  • தலைவலி, பல்வலி என்று எல்லா பிரச்சினைகளும் வரும். அப்போதைக்கு அலோபதி மருந்துகளால் தற்காலிமாக அவற்றை சரிசெய்யலாம். ஆனால் அது நிரந்தரத் தீர்வாகாது? “மனஅழுத்தத்தை” குறைத்து, அன்றாட தியானம், யோகப் பயிற்சிகளை சீராக செய்து, உடல் பராமரிப்பில் தொடர்ந்து உரிய கவனம் செலுத்தினால் மட்டுமே, எல்லா உடல் உபாதைகளையும் படிப்படியாக குறைத்து விலக்கமுடியும். உடல் ஆரோக்கியம் என்பது ஒரு நீண்ட பயணம், ஒரு நாள் கதை அல்ல!

மேற்குறிப்பிட்டவைகள் எல்லாம் வெறும் உதாரணங்களே! நாம் அன்றாடம் செய்யும் எல்லாச் செயல்களிலும் நமக்கு எப்போதுமே இரண்டு வழிகள் இருக்கும்.


  • படிப்படியாக செயலை அதன்போக்கில் முறையாக செய்துமுடித்து நிரந்தரமாக வெற்றி காண்பது!

  • அப்போதைக்கு கிடைக்கும் குறுக்கு வழிகளின் மூலம் அப்போதைக்கு காரியத்தை முடிப்பது!


இதில் எது சிறந்தது என்று நீங்களே யோசியுங்கள்!


என் அறிவுரை! கூடியவரை குறுக்கு வழிகளில் சென்று பெறும் தற்காலிக வெற்றியை தவிர்த்துவிடுங்கள். நேர்வழியை தேர்வு செய்து முன்னேறுங்கள். அந்த நேர்வழியில், வேகமாகச் செல்ல தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்!!


- [ம.சு.கு – 11.10.2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comments


Post: Blog2 Post
bottom of page