top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : ஞாபகமறதி என்பது உண்மையா ?

எல்லோருக்கும் நினைவாற்றல் பொதுவானதே


”எனக்கு ஞாபக மறதி அதிகம்” என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். அது உண்மையானால், அவர் இன்று பைத்தியக்காரனாய் திரிந்து கொண்டிருக்க வேண்டும். அவரால், அவரின் வீடு எது ? தனது உறவு எது ? எந்த நேரத்திற்கு உணவு உண்ண வேண்டும்? தமிழில் எப்படி பேச வேண்டும்? ஆங்கில வார்த்தைகள் எவை? கார் எப்படி ஒட்ட வேண்டும்? என்று பல்லாயிரம் விடயங்களை நினைவில் வைத்துச் செயல்பட முடிகிறது.


இத்தனை விடயங்களை நினைவில் வைத்திருப்பவர், எப்படி ஞாபக மறதிக்காரர் ஆக முடியும்? சற்றே யோசித்துப் பாருங்கள், உலகில் சுயநினைவிலுள்ள எல்லோரும் நல்ல நினைவாற்றல் உள்ளவர்கள் தான்.


உங்கள் சுயநினைவே நினைவாற்றல்தான்


உங்கள் சுயநினைவே, இந்த நினைவாற்றல்தான். அது எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் அதை பயன்படுத்துவதுதான் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. எதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று கவனமாக கற்று, மீண்டும் பயிற்சி செய்கிறீர்களோ, அது கட்டாயம் உங்கள் நினைவில் நீடித்திருக்கும். எதை கவனமின்றி படிக்கிறீர்களோ, அது உடனுக்குடன் மறந்துபோகும்.


உண்மையில், நீங்கள் கவனமின்றி படிப்பது எதுவும் உங்கள் நினைவுகளில் ஏறவதே இல்லை. எப்படி நினைவுகளில் ஏராதது, நினைவில் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியும்?


கவனம்தான் மிகச்சிறந்த வழிகாட்டி


நடைமுறையில் எது கவனத்துடன் செய்யப்படுத்தப்படுகிறதோ, அது சிறப்பாக நடந்தேறுகிறது. எதில் கவனமில்லையோ, அது நடந்தேறுவது கடினமாகிறது.


உங்கள் நினைவாற்றலும் அப்படித்தான். நீங்கள் திருப்பாவை முப்பது பாடல்களையும் மனனம் செய்ய விரும்பினால், மார்கழி மாதம் எல்லா நாளும் அதிகாலையில் கோவிலுக்கு சென்று பக்தர்களுடன் மனமுருக பாடுங்கள். ஒரே மாதத்தில், அந்த முப்பது பாடல்களும் உங்கள் நாவில் தவழும். அதேசமயம், கவனமே இல்லாமல் ஏனோதானோவென்று கோவில் சென்று வழிபட்டு வருபவர்களுக்கு, ஓரிரு வரிகள் கூட நினைவில் இருப்பதில்லை.


மீண்டும் கூறுகிறேன் - எதை கவனத்துடன் நினைவில் ஏற்றுகிறீர்களோ, அதை எளிதாக நினைவுகூர்ந்து விடலாம். கவனம் இல்லாதபோது, எதுவும் நினைல் ஏறுவதில்லை. நினைவில் ஏறாததை, எவ்வளவு முயன்றாலும் நினைவு கூறமுடியாது. நினைவாற்றல் என்பது உங்களின் கவனம் தான்.


சில உத்திகளை கற்று கைக்கொள்ளுங்கள்


நினைவாற்றல் என்பது ஏதோ அசாதாரண சக்தியோ, திறனோ அல்ல. உங்களின் கவனமும், பயிற்சியும் தான் நினைவாற்றலின் கூறுகள். பயிற்சியில் சில உத்திகளைக் கையாண்டால், எங்கும் எதுவும் நினைவில் கொள்ளலாம். ஒன்றை மற்றொன்றுடன் தொடர்புபடுத்தி நினைவில் கொள்வது, எண்களை அதன் ஒலியமைப்புடைய வார்த்தைகளாக்கி நினைவில் கொள்வது, என்று எண்ணற்ற நினைவாற்றல் உத்திகளை வல்லுனர்கள் கண்டபிடித்துள்ளனர்.


நினைவாற்றல் சிறக்க எண்ணற்ற நூல்கள் இருக்கின்றன. ஏதேனுமொரு புத்தகத்தை முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு ஏற்ற உத்தியைக் கையாண்டு நினைவாற்றலை உங்களளின் பலமாக்குங்கள்.


மறவாதீர்


கவனக்குறைவையும், ஒழுங்கின்மையையும்

ஞாபக மறதி என்று சொல்வதில் பயனில்லை;

கவனத்துடன் வாசியுங்கள்;

குறித்த கால இடைவெளியில் மறுவாசிப்பு மேற்கொள்ளுங்கள்;

எல்லாமே நினைவில் இருக்கும்;

நினைவாற்றலை உங்களின் பலமாக்குங்கள்!!


- [ம.சு.கு – 19.02.2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

コメント


Post: Blog2 Post
bottom of page